ADDED : மே 23, 2024 04:05 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் வார்டில் சர்வதேச கங்காரு முறை பராமரிப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது. துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். பச்சிளம் குழந்தைகள் நல பிரிவு துறை தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனையில் குறை மாதத்தில் பிறந்து நல்ல முறையில் காப்பாற்றப்பட்டு வளர்ந்த 30க்கு மேலான குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. நல்ல முறையில் தங்கள் குழந்தைகளை பராமரித்த தாய்களை ஊக்கும் விக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது. குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
பங்கேற்ற போட்டியாளர்கள் கங்காரு முறையில் எப்படி நல்ல முறையில் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்பதை வரைபடமாக கொண்டு வந்திருந்தனர்.
