
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : ஆடிப்பூரத்தை முன்னிட்டு வேடசந்துார் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக்கலசம் ஊர்வலம் நடந்தது.
மன்ற தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். சிறப்பு பூஜைகளுடன் துவங்கிய ஊர்வலத்தில் பெண்கள் கஞ்சிக் கலசத்தை தலையில் சுமந்தப்படி நேருஜி நகர், வடமதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட், ஆத்துமேடு வழியாக மன்றத்தை வந்தடைந்தனர். 500க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானமும் நடந்தது.

