/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது கார்த்தி எம்.பி.,
/
தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது கார்த்தி எம்.பி.,
ADDED : மே 08, 2024 01:37 AM
பழநி:'' தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது'' என சிவகங்கை எம்.பி., கார்த்தி கூறினார்.
பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் கூறியதாவது: மேகதாது அணை பிரச்னையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கும். நீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை குழு ஆகியவற்றின் முடிவுகளுக்கு தமிழக காங்கிரஸ் கட்டுப்படும். தமிழக மருத்துவக் கல்லுாரிகளுக்கு நீட் தேர்வு நடத்தக்கூடாது என தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைந்து வருகிறது. ஓட்டுப் பதிவு இயந்திரம் மீது பல கருத்துக்கள், பல சந்தேகங்கள் உள்ளன. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தற்போது தேர்தல் ஆணையம் ஒரு தொகுதிக்கு 5 பூத் 'விவிபேட்' காகிதத்தை எண்ணி வருகிறது. அதனை ஒரு முறையாவது ஒரு தொகுதிக்கான அனைத்து பூத்களிலும் எண்ணினால் சந்தேகம் தீரும் என்றார்.

