/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
ADDED : மே 09, 2024 06:18 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருத்திகை நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டின் முதல் கிருத்திகை நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சாணார்பட்டி: -சாணார்பட்டி திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் சுப்ரமணிய சுவாமி, உற்ஸவர் முருகப்பெருமானுக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காமாட்சி மவுனகுரு மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறக்காவலர் அழகுலிங்கம் செய்தார்.
நத்தம்: நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வெற்றிவேல் முருகன் சன்னிதியில் சித்திரை மாத கார்த்திகை விழா பூஜையில் முருகனுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. வேம்பார்பட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.