/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானல் காட்டு தீ கட்டுக்குள் வந்தது: கலெக்டர்
/
கொடைக்கானல் காட்டு தீ கட்டுக்குள் வந்தது: கலெக்டர்
கொடைக்கானல் காட்டு தீ கட்டுக்குள் வந்தது: கலெக்டர்
கொடைக்கானல் காட்டு தீ கட்டுக்குள் வந்தது: கலெக்டர்
ADDED : மே 03, 2024 09:15 PM

கொடைக்கானல்:கோடை வெயில் மலைப்பகுதியில் தகிக்கிறது. ஒரு வாரத்திற்கு மேலாக, கொடைக்கானல் பூம்பாறை, கூக்கால், மன்னவனுார் வனப்பகுதிகள் பற்றி எரிகின்றன. தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனினும், சூறைக்காற்று, சுட்டெரிக்கும் வெயிலால் அந்நிய மரங்கள், சோலை மரங்கள் புகைந்து வருகின்றன. காட்டுத் தீயால் மேல்மலை வனப்பகுதி சாம்பல் காடாக காட்சியளிக்கிறது.
இதற்கிடையே, மேல்மலைப் பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து சுற்றுச் சூழல் பாதித்துள்ளது. பூம்பாறை பிரிவிலிருந்து மன்னவனுார், கூக்கால் பிரிவு இடையே சுற்றுலா, கனரக வாகனங்கள் இயக்க, 3 நாள் தடை செய்யப்பட்டு, தீ அணைக்கும் பணி நடந்தது. நேற்றும் கூக்கால் வனப்பகுதி எரிந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில், கலெக்டர் பூங்கொடி,''காட்டுத் தீ கட்டுக்குள் இருப்பதாக, கொடைக்கானல் வன அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று முதல் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படும்,'' என்றார்.