
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.சி., பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் கண்ணன், ராதை வேடமணிந்தும், குழந்தைகளின் தாயார் யசோதா வேடம் அணிந்தும் கலந்து கொண்டனர்.
ராசலீலா எனப்படும் கிருஷ்ணரின் இளமைக்கால வாழ்வை காட்சிப்படுத்தும் விதமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கயிறு இழுத்தல், உறி அடித்தல், புதையல் கண்டெடுத்தல், கைகளை பின்கட்டி பொறி உருண்டை சாப்பிடும் போட்டி ,காளிங்கநர்த்தனம் நாட்டிய நாடகம் நடந்தது.

