நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு : குருநாதநாயக்கனுார் கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள் 23. நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் வேடசந்துார் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கோவிந்தராஜ், மருத்துவ உதவியாளர் பிரதீபா ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனை அழைத்து சென்றனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே சென்றபோது வலியால் துடித்தார்.
ரோடு ஓரமாக ஆம்புலன்ஸ் நிறுத்த மருத்துவ உதவியாளர் பிரதீபா பிரசவம் பார்த்தார். ஆண் குழந்தை பிறந்தது. இதன்பின் மருத்துவமனையில் சேர்த்தனர்.