ADDED : மே 13, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுார் தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 70 பேரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவிகித தேர்ச்சியை தந்தனர்.
பள்ளி அளவில் தரண் 500க்கு 493 பெற்று முதலிடம், கவுசிகா 492 பெற்று 2ம் இடம், பூபாலன் 491 பெற்று 3ம் இடம் பெற்றனர். கணிதத்தில் 9 பேரும், அறிவியலில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள பெற்றனர். 23 பேர் 450க்கு மேலும், 16 பேர் 400க்கு மேலும் பெற்றனர். ஆசிரியர்களான மோசஸ், நளினிசெல்வி, சரஸ்வதி, ராதா, பொன்னுத்தாய், உமாமகேஸ்வரி ஆகியோரை பள்ளி தாளாளர்கள் ஸ்ரீதரன், சாந்தி, தலைமை ஆசிரியர் மணிகண்டன் பாராட்டினர்.