sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அணைப்பட்டியில் கும்பாபிஷேகம்

/

அணைப்பட்டியில் கும்பாபிஷேகம்

அணைப்பட்டியில் கும்பாபிஷேகம்

அணைப்பட்டியில் கும்பாபிஷேகம்


ADDED : மார் 12, 2025 06:29 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை; அணைப்பட்டி வைகை ஆற்றங்கரையில் உள்ள அங்காள அம்மன், கண்ணாயி, பூங்கன்னி அம்மனுக்கு புதிதாக விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் , சிறப்பு வழிபாடுகள் நடந்தது. புனித நதிகளில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டு தீர்த்த கலசங்கள், முளைப்பாரி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரம், தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் அறிவு, சைல்டு வாய்ஸ் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அண்ணாதுரை , கோவில் பூசாரி நாக தேவர், சின்ன பூசாரி நாகராஜ் ,கோவில் நிர்வாக அறங்காவலர்கள் நடராஜன், சிறிய புஷ்பம், மித்ரா, சரவணன், சொர்ணலதாராஜன், உஷா, கருத்தபாண்டி, நாகராஜன் செய்தனர். யாகசாலை பூஜைகளை சீனிவாஸ் நரசிம்ம சர்மா நடத்தினார்.

திண்டுக்கல்: முருகபவனத்தில் உள்ள 51 அடி உயர ஸ்ரீ வைஷ்ணவி காளியம்மன் கோயிலில் 12 வருடங்களுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

இதை முன்னிட்டு மார்ச் 6ல் கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது.

2ம் காலம், 3ம் காலம் யாக பூஜைகள் நடந்தது. பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் கடம் புறப்பட 51 அடி உயர ஸ்ரீ வைஷ்ணவி காளியம்மன், முத்துமாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு பக்தர்கள் கோஷங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

வடமதுரை: கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டிகெப்பம்மாள், கோங்கிலம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கி இரு கால யாக பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பட கும்பங்களில் புனித நீரூற்ற கும்பாபிஷேகம் நடந்தது.

பெருமாள்மலை சுயம்பு பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர்.






      Dinamalar
      Follow us