ADDED : ஜூலை 08, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: எரியோடு ஆவலக் கவுண்டனுாரில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், மந்தை முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி காளியம்மன் கோயில் அர்ச்சகர் குருவாயூரப்பன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர்.
வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், பழனிசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் நடராஜன், திண்டுக்கல் சாவித்திரி உயர்நிலைப் பள்ளி தாளாளர் பஞ்சவர்ணம், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் பங்கேற்றனர்.