ADDED : மார் 29, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை வன்னியபாரைப்பட்டியை சேர்ந்த பெரியசாமி இடப்பிரச்னை காரணமாக 2023 டிசம்பரில் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் உறவினர்களான செந்தில்குமார் 24, ரமேஷ் 23 ,ராஜேஷ் கண்ணன் 25, சிவப்பாண்டி 21 ,ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுள் செந்தில்குமார், ரமேஷ் ஆகியோரின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக ,எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் பூங்கொடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

