/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் சர்ச்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
/
திண்டுக்கல் சர்ச்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
ADDED : மார் 25, 2024 06:52 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட சர்ச்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம், சிறப்பு திருப்பலி நடந்தது.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் துாயவளனார் சர்ச்சில் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில்குருத்தோலை ஊர்வலம் நடந்தது. பாதிரியார் மரிய இஞ்ஞாசி முன்னிலை வகித்தார்.
தென்னங் குருத்தோலைகளில் சிலுவைகள் செய்து அதை ஏந்தியவாறு ஆராதனை பாடல்கள் முழங்க கிறிஸ்தவர்கள் விதிகளில் வலம் வந்தனர். சாலை ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ.,சர்ச்சிலிருந்து துவங்கிய ஊர்வலம் ஆர்.எஸ்.ரோடு வழியாக மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள வளனார் சர்ச்சை அடைந்தது. அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஜெபித்தனர். உதவி பாதிரியார்கள் டோமினிக் சேவியர், அந்தோணி சாமி சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.
நத்தம் : ஆர்.சி., பள்ளி வளாகத்தில் உள்ள புனித சூசையப்பர் சர்ச்சில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் நடந்த திருப்பலி, பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
செந்துறை: செந்துறை புனித சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார்கள் இன்னாசிமுத்து, மரிய பிரான்சிஸ் பிரிட்டோ, சந்தானம், ஆசிர் ஜான்சன் தலைமையில் மங்கலப்பட்டி பிரிவில் இருந்து ஊர்வலம் நடந்தது.
நத்தம் இம்மானுவேல் சேகரன் சர்ச், ஆவிச்சிபட்டி, ஊராளிபட்டி, வேம்பார்பட்டி பகு சர்ச்களிலும் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
சாணார்பட்டி: கொசவபட்டி மைதானத்தில் கிறிஸ்தவர்கள் ஒன்று திரள குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர். புனித ஞானப்பிரகாசியா சர்ச்சில் பாதிரியார் அந்தோணி, தவசிமடை தியான இல்லா பாதிரியார் செபஸ்டின் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுபட்டி அந்தோணியார் சர்ச்சில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது. சிறப்பு பிரார்த்தனையுடன் பாதிரியார் எட்வின் ராஜ் தலைமையில் துவங்கிய ஊர்வலத்தில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பழநி : புனித மைக்கேல் சர்ச் சார்பாக பாதிரியார் ஸ்டான்லி ராபின்சன் தலைமையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் தெரசம்மாள் காலனியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக புதுதாராபுரம் ரோட்டில் உள்ள சர்ச் வளாகத்தில் நிறைவடைந்தது. அதன் பின் திருப்பலி நடந்தது.
இது போல் சி.எஸ்.ஐ. இமானுவேல் சர்ச் சார்பாக வேக்மேன் பள்ளி வளாகத்தில் பாதிரியார் ராஜா தலைமையில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஊர்வலம் புதுதாராபுரம் ரோட்டில் உள்ள சர்ச் வளாகத்தில் முடிந்தது .கவுரவகுரு சுந்தர்ராஜ், ஆயர்வட்ட பொருளாளர் ஜோசப் ராஜ்குமார், ஆயர்வட்ட செயலாளர் அமுதா குமாரி பங்கேற்றனர்.

