/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொட்டித்தீர்த்த மழையால் 'கொடை'யில் மண் சரிவு; ரோடுகளும் சேதம்
/
கொட்டித்தீர்த்த மழையால் 'கொடை'யில் மண் சரிவு; ரோடுகளும் சேதம்
கொட்டித்தீர்த்த மழையால் 'கொடை'யில் மண் சரிவு; ரோடுகளும் சேதம்
கொட்டித்தீர்த்த மழையால் 'கொடை'யில் மண் சரிவு; ரோடுகளும் சேதம்
ADDED : ஆக 15, 2024 01:46 AM

கொடைக்கானல்:- கொடைக்கானலில் நேற்று காலை முதலே கனமழை கொட்டி தீர்த்ததில் மண் சரிவுடன் ரோடுகள் சேதமடைந்தன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு அதிகபட்சமாக 80 மி.மீ., பதிவானது. நேற்று காலை 9:00 மணி முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் மழைநீர் நகரில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது. ரோடுகள் சேதம் அடைந்தன.
வில்பட்டி பிரிவு, டைகர் சோலை உள்ளிட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன. மலைப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்க வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. மூன்று நாட்களில் 100. மி. மீ., மழை பதிவாகியுள்ளது. மலை ரோடுகளில் ஆங்காங்கே திடீர் அருவிகளும் உருவாகியுள்ளது.