ADDED : ஜூலை 02, 2024 05:54 AM

திண்டுக்கல் : மத்திய அரசு நாடாளு மன்றத்தில் மசோதாக்களை தாக்கல் செய்து தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றியமைத்து வடமொழி தலைப்புகளில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்யா அதிநியம் போன்றவையாக மாற்றியமைத்து சட்டமாக்கப்பட்டது.
இதை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் நீதிமன்றம் முன்பாக உண்ணாவிரதம் நடந்தது.
தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் கென்னடி,பொருளாளர் ஜெயலட்சுமி,துணைத் தலைவர் சிவக்குமார், இணை செயலாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.
பழநி: பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன்பு பார் அசோசியேஷன் சார்பில் தலைவர் அங்கு ராஜ், செயலாளர் கலை எழில்வாணன் தலைமையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.