/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்..
/
குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்..
ADDED : மே 20, 2024 06:09 AM
பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள்
கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
-சண்முகம்,கொடைக்கானல்.
தடுக்கப்படும்
தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-சத்தியநாதன், நகராட்சி கமிஷனர்,கொடைக்கானல்.
ரோட்டில் குப்பை
பழநி திருவள்ளுவர் ரோட்டில் குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
-ராஜேஸ்,பழநி.
தீர்வு காணப்படும்
நகராட்சியில் குப்பை லாரிகள் பற்றாக்குறை உள்ளது. விரைவில் குப்பை தேங்காமல் தடுக்கப்படும்.
-செபாஸ்டின்,கவுன்சிலர்,பழநி.
தேவை குடிநீர் இணைப்பு
சாணார்பட்டி ஊராட்சி கோணப்பட்டி வடக்கு தெரு குடியிருப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.
-வேல்முருகன்,கோணப்பட்டி.
நடவடிக்கை எடுக்கப்படும்
வடக்கு தெரு குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
-கருப்பையா, ஊராட்சி செயலர்,சாணார்பட்டி.
சேதமான ரோடு
குளத்துார் அரசம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் வளைவு பகுதியில் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் கவிழும் ஆபத்து உள்ளது.
-கண்ணன், குளத்துார்.
சீரமைக்கப்படும்
சீரமைப்பு பணி செய்ய ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
-மோகன்தாஸ், ஊராட்சி செயலாளர், குளத்துார்.
ஆற்றில் கழிவுகள்
வேடசந்துார் நகரின் மையப் பகுதியில் செல்லும் குடகனாற்றில் இரவு நேரங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.அழகுசுந்தரம்,வேடசந்துார்.
தீர்வு காணப்படும்
குடகனாற்றில் குப்பைகொட்டுவதை கண்காணித்து வருகிறோம். அதையும் மீறி யாரும் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
-மேகலா,பேரூராட்சி தலைவர், வேடசந்துார்.
சேதமான ரோடுகள்
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் குழாய்களுக்காக சேதப்படுத்தப்பட்ட ரோடுகள் அப்படியே உள்ளன. இதை சீரமைக்க வேண்டும்.
-கதிரேசன் ஒட்டன்சத்திரம்.
சீரமைக்கப்படும்
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் குழாய்கள் அமைக்க சேதப்படுத்தப்பட்ட ரோடுகள் குழாய் அமைக்கும் பணிகள் முடிந்தபின் சீரமைக்கப்படும்.
-திருமலைசாமி,நகராட்சி தலைவர்,ஒட்டன்சத்திரம்.
தெருவிளக்கு தேவை
கன்னிவாடி அச்சாம்பட்டி மெயின் ரோட்டிலிருந்து சோமலிங்கபுரம் செல்லும் வழியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை.
-அ.சுவாமிநாதன், கன்னிவாடி.
அமைக்கப்படும்
இப்பகுதியில் தேவைக்கேற்ப கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-மணிமாலா,பேரூராட்சி
கவுன்சிலர், சின்னாளபட்டி.

