தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/   குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக...  

  குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக...  

  குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக...  


ADDED : மே 04, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2024 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேதமான ரோடால் அவதி


ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டின் சில இடங்களில் ரோடுசேதம் அடைந்து பெரிய பள்ளங்களாக மாறி உள்ளது. சீரமைக்க வேண்டும்.

-கார்த்திக்,ஒட்டன்சத்திரம்.

சீரமைக்கப்படும்


பைபாஸ் ரோட்டில் பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

-திருமலைச்சாமி,

நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம்.

நாய்கள் தொல்லை


கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள்அச்சப்படுகின்றனர்.

-ஆதவன்,கொடைக்கானல்.

தீர்வு காணப்படும்


நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

-ஜெயசுந்தரம், நகராட்சி கவுன்சிலர், கொடைக்கானல்.

கொசு பிரச்னை


பழநி சிவகுருசந்து பகுதியில் சாக்கடை துார்வாராமல் இருப்பதால் கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளது.

-சிவன்,பழநி.

கட்டுப்படுத்தப்படும்


சாக்கடையை துார்வார முறையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

-காளீஸ்வரி, நகராட்சி கவுன்சிலர்,பழநி.

சேதமான ரோடு


சித்துவார்பட்டி ஊராட்சி ஊத்துப்பட்டி ரோடு சேதமடைந்து குண்டும்,குழியுமாக உள்ளது. ரோடை சீரமைக்க வேண்டும்.

-அய்யப்பன், அய்யலுார்.

தீர்வு காணப்படும்


ரோடை சீரமைக்க நெடுஞ்சாலை துறையிடம் வலியுறுத்தப்படும்.

-ஈஸ்வரிபாரதி,

ஒன்றிய கவுன்சிலர்,மோர்பட்டி.

இல்லை நிழற்குடை


வேடசந்துார் ஆத்து மேடு ஒட்டன்சத்திரம் ரோடு பஸ் ஸ்டாப்பில் இதுவரை நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலில் பாதிக்கின்றனர்.

-ஆர். லட்சுமணன், வேடசந்துார்.

நடவடிக்கை எடுக்கப்படும்


நிற்குடை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

-மேகலா,பேரூராட்சி தலைவர்,வேடசந்துார்.

புதுப்பிக்க வேண்டும்


வேம்பார்பட்டியிலிருந்து மொட்டையன்கவுண்டன்பட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்கள் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.

-கிருஷ்ணன்,மொட்டையன்கவுண்டன்பட்டி.

தீர்வு காணப்படும்


ரோடை புதுப்பிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரோடு புதுப்பிக்கப்படும்.

-கந்தசாமி, ஊராட்சித் தலைவர், வேம்பார்பட்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us