sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம் பகுதிக்காக......

/

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம் பகுதிக்காக......

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம் பகுதிக்காக......

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம் பகுதிக்காக......


ADDED : மே 09, 2024 06:22 AM

Google News

ADDED : மே 09, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயன்பாடில்லா பூங்கா நிலம்


ஒட்டன்சத்திரம் நகராட்சி 12 வது வார்டில் உள்ள பூங்கா இடம் பயனின்றி உள்ளது. பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ---முகமது இஸ்மாயில், ஒட்டன்சத்திரம்

நடவடிக்கை எடுக்கப்படும்


ஒட்டன்சத்திரம் நகராட்சி 12 வது வார்டில் உள்ள பூங்கா இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

- -முகமது மீரான், கவுன்சிலர், ஒட்டன்சத்திரம்.

-----------------நிழற்குடை சேதம்

சுக்காம்பட்டி அயினாம்பட்டி பிரிவு பகுதியில் பயணியர் நிழற்கூடத்தின் கூரை, ஜன்னல் பகுதி சேதமடைந்து கிடக்கிறது.

-கதிரேசன், அய்யலுார்.

ஆய்வு செய்யப்படும்


ஆய்வு செய்து சீரமைப்பு பணி செய்ய நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்படும்.

- -குமரவேல், ஊராட்சி செயலாளர், சுக்காம்பட்டி.

-------------------தீயில் எரியும் குப்பை


வேம்பார்பட்டி ரோட்டில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதார பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

-தங்க பாண்டி, அய்யாபட்டி. ஊராட்சி

நடவடிக்கை எடுக்கப்படும்


துாய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று தினமும் குப்பைகளை சேகரிக்கின்றனர். சில குடியிருப்பு வாசிகள் மட்டும் குப்பைகளை ரோட்டில் கொட்டுகின்றனர். அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

-தமிழரசி கார்த்திகைசாமி,ஊராட்சி தலைவர்,கோம்பைப்பட்டி.

------------------

விபத்து அபாயம்


ஒட்டன்சத்திரம்-செம்பட்டி ரோட்டில் தருமத்துப்பட்டி அருகே சுரக்காபட்டி சந்திப்பு பகுதியில் வாகனங்களில் அதிவேக பயணத்தால் விபத்துகள் நடக்கிறது.

-சி. ஆண்டவர், சுரக்காபட்டி.

விரைவில் நடவடிக்கை


சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீஸ், நெடுஞ்சாலை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

-மருதமுத்து, தலைவர், தருமத்துப்பட்டி ஊராட்சி.






      Dinamalar
      Follow us