/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வசதிகளை காணோம் ... நாய்கள், கொசுத்தொல்லை புலம்பலில் புஷ்பம்மாள் நகர் குடியிருப்போர்
/
வசதிகளை காணோம் ... நாய்கள், கொசுத்தொல்லை புலம்பலில் புஷ்பம்மாள் நகர் குடியிருப்போர்
வசதிகளை காணோம் ... நாய்கள், கொசுத்தொல்லை புலம்பலில் புஷ்பம்மாள் நகர் குடியிருப்போர்
வசதிகளை காணோம் ... நாய்கள், கொசுத்தொல்லை புலம்பலில் புஷ்பம்மாள் நகர் குடியிருப்போர்
ADDED : ஆக 08, 2024 05:19 AM

திண்டுக்கல்: ரோடுகள், சாக்கடைகள் இல்லை, நாய்கள், கொசுக்கள் தொல்லை, தேங்கி நிற்கும் நீரால் நோய்தொற்று அபாயம் என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் புஷ்பம்மாள் நகர் குடியிருப்பு வாசிகள்.
திண்டுக்கல் - தாடிகொம்பு ரோட்டில் உள்ள புஷ்பம்மாள் நகர் ,சோபா நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலர் சிவக்குமார், துணைச் செயலர் தேவராஜ்,உறுப்பினர்கள் முருகன், லட்சுமணன், ராதாகிருஷ்ணன் கூறியதாவது : 6 ஆண்டுகளாக வளர்ந்து வரும் பகுதிகளாக இருந்தும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எங்கும் சாக்கடைகள் இல்லை. இதனால் ஆங்காங்கு கழிவுநீர் தேங்கி விடுகிறது. மழை பெய்தால் காலிமனைகள் உட்பட அனைத்து இடங்களிலும் நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. நீர் செல்ல வடிகால் இல்லாதது பெரும் பிரச்னையாக உள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது. மிகவும் முக்கியமான பிரச்னை தெரு விளக்குகள் இல்லாதது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். விஷப் பூச்சிகள், பாம்புகள் வருவது தெரிவதில்லை. மாலை நேரங்களுக்கு மேல் வெளியே வர தயங்க வேண்டியதாக உள்ளது.
தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
குடிநீர் குழாய்கள் இல்லை. மாநகராட்சி வண்டிகளும் வருவதில்லை. எல்லாம் சொந்தமாக ஏற்படுத்தினால் மட்டுமே உண்டு. பொதுக்குழாய் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.
வரிகள் மட்டும் வசூல் செய்கின்றனர் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. பலமுறை முறையிட்டும் பயனில்லை என்றனர்.