தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சி.பி.சி.ஐ.டி., விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் பத்திர எழுத்தர் ஆஜர்- கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் பறிமுதல்

 சி.பி.சி.ஐ.டி., விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் பத்திர எழுத்தர் ஆஜர்- கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் பறிமுதல்

 சி.பி.சி.ஐ.டி., விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் பத்திர எழுத்தர் ஆஜர்- கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் பறிமுதல்


ADDED : செப் 25, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடம் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் இரண்டு நாள் சி.பி.சி.ஐ.டி., காவல் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வீட்டில்இருந்து கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் 48, ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் 38, உட்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்ற அனுமதியுடன் முதற்கட்டமாக அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே இதன் பின்னணியில் உள்ளவர்கள், மோசடி பத்திரம் தயாரிக்க உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாசிடம் கூடுதல் விபரங்கள் சேகரிக்க அவரை மட்டும் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஜெயப்பிரகாசை செப்.,24 மதியம் 1:00 மணி வரை இரண்டு நாள் காவலில்வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி பத்மநாபன் செப்.22ல் உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு தொடர்பான கூடுதல் விபரங்கள், கைது செய்யப்பட்டவர்கள், சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடந்தது.

இதன் ஒருபகுதியாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயப்பிரகாஷின் தோட்டத்து வீட்டுக்கு சென்ற போலீசார் மோசடி பத்திரம் தயாரிப்புக்கு பயன்படுத்திய 2 கம்ப்யூட்டர்கள், ஆவணங்களை பறிமுதல் செய்து அவரின் பதில்களைபதிவு செய்தனர்.

தொடர்ந்து அவர் திண்டுக்கல் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ்குமார் (பொறுப்பு) முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமின் மனு தள்ளுபடி பழநி ஆயக்குடி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் உட்பட சிலர் மீது ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கிலும் கைதான ஜெயப்பிரகாஷ் , ஜாமின் கேட்டு திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி பத்மநாபன் தள்ளுபடி செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us