ADDED : செப் 11, 2024 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:ஆசையாய் வளர்த்த சேவலை எடுத்து சென்ற அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் அம்பாத்துறையை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி 34. இவரது தம்பி சந்தோஷ் குமார் 22. இவர்கள் வீட்டில் சேவல் ஒன்றை வளர்த்துள்ளார். இதை சத்தோஷ் குமாருக்கு தெரியாமல் முனியாண்டி துாக்கி சென்றார். சேவலை தருமாறு சந்தோஷ்குமார் கேட்டார்.
தராததால் ஆத்திரத்தில் 2020 செப்.29ல் கத்தியால் முனியாண்டியை குத்திக்கொலை செய்தார். இந்தவழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முத்துசாரதா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மகேந்திரன் ஆஜரானார்.