/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போக்சோ வழக்கில் இருவருக்கு 'ஆயுள்'
/
போக்சோ வழக்கில் இருவருக்கு 'ஆயுள்'
ADDED : ஆக 30, 2024 02:56 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் புதுப்பட்டி கணவாய்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மகேந்திரன், 33. இவர், 2022ல் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். அதுபோல, நிலக்கோட்டை அணைப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி குபேந்திரபாண்டி, 24. இவர், 2021ல் அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். நிலக்கோட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் இருவரையும் கைது செய்தனர்.
இரு வழக்கு விசாரணையும் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம், குபேந்திரபாண்டிக்கு ஆயுள் தண்டனை, 1.05 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.

