/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுலா பயணிகளை கவரும் லில்லியம் பூ
/
சுற்றுலா பயணிகளை கவரும் லில்லியம் பூ
ADDED : மே 09, 2024 11:47 PM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள லில்லியம் பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இப்பூங்காவில் உள்ள பசுமை குடிலில் இருமாதங்களுக்கு முன் தொட்டிகளில் நெதர்லாந்தை பிறப்பிடமாக கொண்ட குட்டை ரக லில்லியம் பூக்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது இவை ஆரஞ்சு, பிங்க் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் பூத்துள்ளன. இவை மலர் படுகையில் அடுக்கி வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
பூக்களை பார்த்துச் செல்லும் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூ இரு வாரங்கள் வாடாமல் இருக்கும். ஒரு செடிக்கு அதிகபட்சமாக 6 பூ பூக்கும். நெட்டை ரகத்தில் 5 நிறம் உள்ளன. தற்போது அவை மொட்டுகளாக உள்ளன. இவை பூக்கும் தருணத்தில் அழகு சேர்த்து மலர் கண்காட்சியில் இடம் பெற்று மிளிரும்.