ADDED : ஆக 09, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில் பிளாஸ்டிக் குப்பையிலிருந்து உணவு தேடும் கால்நடைகள் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகர் பகுதியில் குப்பை அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. நகரில் பிளாஸ்டிக் பை, 5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில் பயன்பாட்டிற்கு தடை உள்ளது. இருப்பினும் பயன்பாடு அதிகரித்துள்ளது. குப்பை சரிவர அள்ளப்படாத நிலையால் உணவுப் பொருட்களை தேடி வரும் கால்நடைகள் பிளாஸ்டிக் பொருட்களை உண்கின்றன. இதனால் செரிமானப் பிரச்னையால் பாதிக்கின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, நாள்தோறும் பிளாஸ்டிக் குப்பை அகற்ற நகராட்சி முறையான தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
