தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பயனற்ற காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம்:வீணாகும் நகராட்சி நிதி

பயனற்ற காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம்:வீணாகும் நகராட்சி நிதி

பயனற்ற காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம்:வீணாகும் நகராட்சி நிதி


UPDATED : ஆக 09, 2026 11:10 PM

ADDED : ஆக 09, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 11:10 PM ADDED : ஆக 09, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் பயனற்றுள்ள நிலையில் உள்ளதால் நகராட்சி நிதி வீணாகியுள்ளது.

சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் நவீன வசதிகளை கட்டமைக்கும் நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி பிரையன்ட் பூங்கா, நாயுடுபுரத்தில் காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இரண்டு இயந்திரத்தை அமைத்தது. அமைத்த சில மாதங்கள் மட்டுமே இவை பயன்பாட்டில் இருந்தது. பின் தொழில்நுட்பக் கோளாறு, காற்றில் ஈரப்பதம் அதிகரித்தது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செயல்படாது காட்சிப் பொருட்களாக உள்ளன. பல லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரம் பராமரிப்பின்றி உள்ளது குறித்து நகராட்சி கண்டு கொள்ளவில்லை. கொடைக்கானலில் காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் தோல்வி அடைந்ததை இவை காட்டுகிறது. இதனால் நகராட்சி நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us