ADDED : ஆக 09, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தொகுதி மறுவரையறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கைகளில் கறுப்பு பலுான் ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. மாநகர மாவட்டத் தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே காமராஜர் சிலை முன்பிருந்து துவங்கிய ஊர்வலம் ஏ.எம்.சி., சாலை வழியாக மாநகராட்சி அலுவலகம் முன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கைராஜா, கவுன்சிலர் பாரதி உள்ளிட்ட எராளமானோர் பங்கேற்று கைகளில் வைத்திருந்த கறுப்பு பலுான்களை உடைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
