/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'‛லொடக்கு' பஸ்களால் பயணிகளுக்கு ஆபத்து
/
'‛லொடக்கு' பஸ்களால் பயணிகளுக்கு ஆபத்து
ADDED : மே 17, 2024 06:12 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடும் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் பழுதடைந்து பரிதாபமாக உள்ள நிலையில் பயணிகளுக்கு ஆபத்து நேரும் வகையில் உட்கட்டமைப்பு உள்ளது.
மாவட்டத்தில் ஓடும் டவுன் பஸ்கள் பெரும்பாலும் பழுதடைந்த நிலையில் லொடக்கு' பஸ்ஸாகவே உள்ளது. பல இடங்களில் பஸ்ஸை நிறுத்தி மீண்டும் ஸ்டார்ட்' செய்யும்போது கிளப்ப முடியாததால் பயணிகளை கொண்டே ஐலசா' சத்தம் போடாத குறையாக நகர்த்தி செல்கின்றனர். இதன் உச்சமாக பஸ்சின் உட்புறமான மேல்தளம், இருக்கை சேதமடைந்து போல்டு, நட்டுகள் வெளியில் தெரிந்தபடி நீட்டி கொண்டுள்ளது.
இதனால் பயணிகளுக்கு காயம் ஏற்படுகிறது. இருக்கைகளின் பின்புறமாக நீட்டி கொண்டிருக்கும் போல்டு, நட்டானது குழந்தைகளின் கண், நெற்றிகளில் குத்தி காயப்படுத்த தயார் நிலையில் காத்து கொண்டிருக்கிறது. இருக்கையின் பின்புற அட்டைகளும் சேதமடைந்து கத்தி போல் கூர்முனையாக கையை கிழிக்கும் அபாய நிலையில் உள்ளது.
பெரும்பாலும் இத்தகைய லொடுக்கு பஸ்கள் மகளிர் இலவச பயணத்திற்காகவே வலம் வருகின்றன. போக்குவரத்து துறை அதிகாரிகள் லொடக்கு' பஸ்களை சீரமைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

