ADDED : மார் 10, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் மெக்னோலியா பூவை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானலில் இவ்வகை மரம் ஏராளமாக உள்ளது.
பொதுவாக மார்ச் மாதத்தில் பூத்துக் குலுங்கும் இம்மலரை உள்ளூர்வாசிகள் ஆகாயத்தாமரை என அழைப்பர். மணம் கமழும் இம்மலர் தெய்வத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது. இருந்த போதும் செட்டியார் பூங்கா, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் இவை தற்போது இரு வண்ணங்களில் பூக்க துவங்கி உள்ளது. வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதன் அழகை ரசிக்கின்றனர்.