நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் மகிளா காங்.,சார்பில் ஊர்வலம் நடந்தது. மகிளா காங்.,மாநில தலைவர் அசினா சையத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் துரை மணிகண்டன்,மாநகர மகிளா காங்.,தலைவி ரோஜா பேகம்,கிழக்கு மகிளா காங்.,தலைவர் சுமதிநாகராஜன்,மேற்கு மகிளா காங்., தலைவர் உமா முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் பாரதி,நிர்வாகிகள் முகமது அலியார்.அபுதாகிர்,கார்த்திக்,பகுதி செயலாளர்கள் பரமன்,உதயகுமார்,அப்பாஸ் மந்திரி,நாகலட்சுமி பங்கேற்றனர். மாவட்ட கட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் முன் முடிந்தது.