ADDED : செப் 07, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழ்நாடு வேளாண் பல்கலை வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் சார்பில் மக்காச்சோள சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பற்றிய விவசாயிகள் கலந்தாய்வு கருத்தரங்கு திண்டுக்கல்லில் நடந்தது.
உதவிப்பேராசிரியர் சத்தியசீலா வரவேற்றார். கோவை சிறுதானியத்துறை தலைவர் சிவக்குமார், இந்திய பொட்டாஷ் நிறுவன முதுநிலை மேலாளர் பார்வதி ராஜா பேசினார்.
ஆராய்ச்சி நிலைய தலைவர் செல்வக்குமார், பொட்டாஷ் நிறுவன துணை மேலாளர் ஹரிபாபு, முதன்மை விற்பனை அதிகாரி மாரியப்பன் கலந்து கொண்டனர். விற்பனை அதிகாரி சரவணபிரகாஷ் நன்றி கூறினார்.