/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மது பழக்கத்தால் விபரீதம் நண்பரை கொன்றவர் கைது
/
மது பழக்கத்தால் விபரீதம் நண்பரை கொன்றவர் கைது
ADDED : மார் 08, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்,:திண்டுக்கல் குளிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் 45. இவரது நண்பர் பாறைப்பட்டியை சேர்ந்த ரவி, 40. கட்டட தொழிலாளிகளான இருவரும் சேர்ந்து மது குடிப்பர். நேற்று காலை வழக்கம் போல் மது குடித்து விட்டு கோடாங்கிபட்டி அருகே ரோட்டில் நடந்து வந்த போது அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ரவி கத்தியால் குத்தியதில் வெங்கடேஷ் இறந்தார். ரவியை போலீசார் கைது செய்தனர்.