ADDED : ஆக 02, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெரியாண்டவர் கோயில் அருகே சந்தேகப்படும்படி சிலர் ஒன்றுகூடி நிற்பதை போலீசார் கவனித்தனர். இதற்கிடையில் போலீசை கண்டதும் அந்த கும்பல் ஓட்டம் பிடித்தது.அதில் பிடிப்பட்ட நபரிடம் விசாரித்ததில் அவர் பொன்மாந்துறை புதுப்பட்டி அன்பழகன் 25, மூன்று கொலை உள்பட 18 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என தெரிந்தது. மேலும் அவர் உள்பட 7 பேர் சேர்ந்து கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பட்டாக்கத்தியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
