
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காந்திநகர் உச்சி காளியம்மன், முத்து மாரியம்மன் கோயிலில் பிப்.16ல் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்று முன் தினம் 48வது நாள் மண்டல பூஜை நடந்தது. காந்திநகர் ஊர் மக்கள் தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கணபதி பூஜை, யாக பூஜை தொடர்ந்து உச்சி காளியம்மன் மாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பணசுவாமி தெய்வங்களுக்கு புண்ணிய தீர்த்தங்களை ஊற்ற சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

