ADDED : ஆக 31, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் தெரசா பல்கலையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடந்தது.
சன் லயன்ஸ் சங்கம், தெரசா பல்கலை இணைந்து நடத்தி இதை பல்கலை துணை வேந்தர் கலா, லயன்ஸ் சங்க மாவட்ட முன்னாள் கவர்னர் டி.பி.ரவீந்திரன் துவக்கி வைத்தனர். விளையாட்டுத் துறை இயக்குனர் ராஜம் வரவேற்றார்.
பதிவாளர் ஷீலா, தேர்வு கட்டுபாட்டாளர் கிளாரா தேன்மொழி கலந்து கொண்டனர். பொது நல சங்க முன்னாள் தலைவர் ஆஷா ரவீந்திரன், உடற்கல்வி ஆசிரியர் அன்பு மாரி நன்றி கூறினார். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கப்பட்டது.