ADDED : செப் 08, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: பாடியூர் நாட்டண்மைகாரன்பட்டி வீருதும்மம்மன் மாலைக் கோயில், ஜி.டி.என்., நர்சிங் கல்லுாரி, அரவிந்த் கண் மருத்துமனை, என்.எஸ்.நகர் லயன்ஸ் சங்கம், ஒக்கலிகர் தசரிவார் குல பங்காளிகள் ஆகியோருடன் இணைந்து கண் மருத்துவ முகாம் நடத்தினர். காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஜி.டி.என்., கல்லுாரி இயக்குனர் வெங்கடேஷன் துவக்கி வைத்தார்.
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சிவா, புனிதநேரு, கோயில் தலைவர் தாந்தோன்றிசாமி, செயலாளர் பொன்னுச்சாமி, பழனிச்சாமி, சக்திவேல், திம்மையன், துணை செயலாளர் செல்வராஜ் பங்கேற்றனர். ஏற்பாட்டினை இந்திரா டிரேடர்ஸ் நிர்வாகி பவுன் செய்திருந்தார்.