/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதிய பஸ் கேட்டு மருத்துவ மாணவர்கள் வாக்கு வாதம்
/
புதிய பஸ் கேட்டு மருத்துவ மாணவர்கள் வாக்கு வாதம்
ADDED : ஆக 23, 2024 04:47 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரியிலிருந்து மருத்துவமனைக்கு மாணவர்களை ஏற்றி செல்ல பழைய பஸ் வந்ததால் மாணவர்கள் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் நல்லாம்பட்டி ஒடுக்கம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளது. இங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று வர பஸ் வசதி இல்லாமல் இருந்தது.
மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் புதிய பஸ்சை இயக்கிய நிலையில் 2வது நாளான நேற்று பழைய பஸ்சை இயக்கியது. மருத்துவ கல்லுாரி மாணவர்கள் புதிய பஸ்தான் வேண்டும் என கூறி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடித்தனர். இன்றும் பழைய பஸ் வந்தால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.