/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுவாமி சிலைகளை உடைத்த மனநலம் பாதித்தவர்
/
சுவாமி சிலைகளை உடைத்த மனநலம் பாதித்தவர்
ADDED : மார் 06, 2025 03:55 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் என்.எஸ்., நகர் ஸ்ரீ ராம பெருமாள் கோயிலில் உள்ள சுவாமி சிலைகளை உடைத்தது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
திண்டுக்கல் கரூர் ரோடு என்.எஸ். நகர் ஸ்ரீ ராம பெருமாள் கோயிலில் கருடாழ்வார், விநாயகர், நந்தி சிலைகள் உள்ளன.
நேற்று முன்தினம் இங்குள்ள கருடாழ்வார்,நந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தினர்.
தாடிக்கொம்பு போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ய இதில் ஈடுபட்டது திண்டுக்கல் என்.எஸ்.நகர் அஞ்சல் நகரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட விக்னேஷ் 25, என்பது தெரிந்தது. இவர் நேற்று காலை ஆர்.வி.எஸ்., நகரில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.