ADDED : மே 19, 2024 06:37 AM
அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் : மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் அண்ணா நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்கள், அடி பம்புகள் முறையாக இயங்குகிறதா என ஆய்வு செய்தனர். பொறியாளர் சுப்ரமணியன், உதவி பொறியாளர் சாமிநாதன், மாநகர நல அலுவலர் பரிதாவாணி உடனிருந்தனர். நகர் முழுவதும் ஆய்வு செய்து சேதமான ரோடுகள் குறித்த விவரமும்சேகரிக்கப்பட்டது.
பதாகைகள் பறிமுதல்
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் வாகனம் அதிகம் செல்லக்கூடிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையுறாக ரோட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த 50க்கு மேற்பட்ட பதாகைகளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி தலைமையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்
திண்டுக்கல் : கொடைக்கானலில் நடைபெறும் மலர்கண்காட்சியை தினமும் காலை 7:00மணி முதல் இரவு 7:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் ,அவருடன் வரும் உதவியாளர் ஒருவருக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்றுவர வசதியாக போதுமான அளவு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேடசந்துாரில் ரத்ததான முகாம்
வேடசந்துார்: கோவிலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , வேடசந்துார் நாகா லிமிடெட் டிடர்ஜென்ட் நிறுவனம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்மகேஸ்வரி தலைமை வகித்தார். நாகா குழும தலைவர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். டாக்டர் அபிநயா தலைமையிலான குழுவினர் நாகா குழுமத்தை சேர்ந்த 125 தன்னார்வலர்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர். நாகா லிமிடெட் பொது மேலாளர் ஜேம்ஸ், மனிதவள மேலாளர் சசிகுமார், சுகாதார ஆய்வாளர்கள் போரப்பன், சர்க்கரை பங்கேற்றனர். வேடசந்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் வேடசந்துார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மன்ற தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் பங்கேற்றனர்.

