/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எம்.ஜி.ஆர்., கட்சியில் நம்பியாருக்கு ஓட்டா; பா.ம.க., வேட்பாளர் திலகபாமா கேள்வி

ADDED : மார் 31, 2024 06:54 AM
கொடைக்கானல் : ''எம்.ஜி.ஆர்., கட்சியில் நம்பியாருக்கு ஓட்டு போடும் அவலம் உள்ளதாக,'' திண்டுக்கல் தொகுதி பா.ம.க., வேட்பாளர் திலாபகபாமா பேசினார்.
கொடைக்கானலில் திண்டுக்கல் லோக்சபா தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். இதில் பா.ம.க., வேட்பாளர் திலகபாமா பேசியதாவது: அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள எஸ். டி. பி. ஐ. , வேட்பாளர் தேசிய புலனாய்வு முகமை மூலம் விசாரிக்கப்படும் நபர் . இதன் மூலம் எம்.ஜி.ஆர்., கட்சியில் உள்ளவர்கள் நம்பியாருக்கு ஓட்டு போடும் அவலம் உள்ளது. மதுவிற்கு எதிராக பேசும் கனிமொழி மது தொழிற்சாலை நடத்தி கொள்ளை லாபம் பார்க்கிறார். மதுவிற்கு எதிராக போராடி கடையை சூராடியவள் நான். எதற்கும் அஞ்சமாட்டேன். தி.மு.க., சார்ந்துள்ளது இண்டியா கூட்டணி கிடையாது இந்தி கூட்டணி. வெற்றி பெறும் முன்பே கொடைக்கானலில் வீடு பார்த்து வருகிறேன். தி.மு.க., கமிஷன் பார்க்கும் கட்சி. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி. பா.ஜ., சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி இல்லை. காஷ்மீரில் அனைவரும் சுதந்திரமாக சென்று வரும் சூழலை உருவாக்கியவர் பிரதமர். அயோத்தியிலும் சுமூக நிலை உருவாக காரணமாக இருந்தார். திண்டுக்கல் தொகுதிக்கு தேவையான வளர்ச்சி பணியை செய்வேன். இல்லையேல் சட்டையை பிடித்து கேளுங்கள் என்றார்.