/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இடம்பெயரும் தி.மு.க.,தொண்டர்கள்
/
இடம்பெயரும் தி.மு.க.,தொண்டர்கள்
ADDED : மார் 31, 2024 07:07 AM
திண்டுக்கல் : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.,உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தேர்தல் பணியில் ஈடுபட உற்சாகமாக இருந்தனர். தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மதுரை,திண்டுக்கல் என அடுத்தடுத்த தொகுதிகள் தி.மு.க.,கூட்டணியில் உள்ள மா.கம்யூ., க்கு ஒதுக்கப்பட்டது. இந்த அறிவிப்புகள் வெளியானதும் தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். திண்டுக்கல்லில் 2 அமைச்சர்கள் இருந்தும் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கியது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொகுதி மா.கம்யூ.,க்கு ஒதுக்கியதால் அவர்கள் தரப்பில் பிரசாரம் நடக்கிறது. தி.மு.க.,தொண்டர்களுக்கு முறையாக கவனிப்பு செல்லாமல் உள்ளது.
இதனால் அதிருப்தியில் உள்ள தொண்டர்களுக்கு தேனி தொகுதி மீது கவனம் திரும்பி உள்ளது. தொகுதி பொறுப்பாளராக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,மூர்த்தி உள்ளதால் திண்டுக்கல்லில் உள்ள தி.மு.க.,தொண்டர்கள் தேனி தொகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

