/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டியில் மினி நெசவு பூங்கா; நெசவாளர்கள் அதிருப்தி
/
சின்னாளபட்டியில் மினி நெசவு பூங்கா; நெசவாளர்கள் அதிருப்தி
சின்னாளபட்டியில் மினி நெசவு பூங்கா; நெசவாளர்கள் அதிருப்தி
சின்னாளபட்டியில் மினி நெசவு பூங்கா; நெசவாளர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 14, 2024 07:11 AM
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் ஜவுளி பூங்கா என்ற நிலை மாறி பெயரளவில் மினி பூங்காவாக துவக்கப்படும் நிலையில் நெசவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சின்னாளபட்டியில் நெசவு பூங்கா அமைக்க கைத்தறி , துணிநுால் துறை சார்பாக முடிவு செய்ய இதன் பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. அதிக தறிகள் பொருத்த வேண்டிய சூழலில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்(10 தறிகள்) மட்டும் அமைக்கப்பட்டன. நெசவு நெய்வதற்கு ஆட்கள் வராது தடுமாறும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஜவுளி பூங்கா மினி நெசவு பூங்காவாக மாறி உள்ளது.
கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: நெசவாளர் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இது தனியார் சேலை உற்பத்தி செய்யும் நபர்களுக்கே மறைமுகமாக பயனளிக்கும் அவல நிலை உள்ளது. நெசவு பூங்கா அமையும் என்ற நிலையில் சின்னாளபட்டி நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சிலர் திட்டத்தை முடக்கும் போக்கில் செயல்பட்டனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களை கண்காணிக்க வேண்டிய அலுவலர்கள் சிலரும் உடந்தையாக உள்ளனர். இவர்களில் சுயநல போக்கால் மினி நெசவு பூங்காவால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. குடியிருப்பு வசதியுடன் உண்மையான பயனாளிகளை தேர்வு செய்து கூடுதல் தறிகளுடன் நெசவு பூங்கா அமைப்பதே தீர்வாகும் என்றனர்.