/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நெல்லுக்கு ஆதார விலை அமைச்சர் சக்கரபாணி தகவல்
/
நெல்லுக்கு ஆதார விலை அமைச்சர் சக்கரபாணி தகவல்
ADDED : மார் 06, 2025 03:53 AM

ஒட்டன்சத்திரம்: விவசாயிகளுக்கு செப்டம்பர் முதல் நெல்லுக்கு ஆதாரவிலையாக குவிண்டாலுக்கு ரூ. 2500 வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சத்திரப்பட்டியில் வேளாண் துறையின் சார்பாக 347 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மதிப்பிலான மாநில பேரிடர் நிவாரண நிதி , நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு விலை கிடைக்காத நேரங்களில் சேமித்து வைப்பதற்காக ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடியில் குளிர்சாதன கோடவுன் அமைக்கப்பட்டு உள்ளது.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாகரையில் மக்காச்சோள ஆராய்ச்சி மையம் கொண்டுவரப்பட்டது. 46 மாத ஆட்சி காலத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் ஏழுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது, என்றார்.
தாசில்தார் சசி, வேளாண் துணை இயக்குனர் காளிமுத்து, உதவி இயக்குனர்கள் பூரணி, சந்திர மாலா, வேளாண் அலுவலர்கள் அப்துல்காதர்ஜெய்லானி, நல்லமுத்துராஜா, மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ரமேஷ்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜ் கலந்து கொண்டனர்.