/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறப்பாக சேவை ஆற்றுங்க அமைச்சர் சக்கரபாணி அறிவுரை
/
சிறப்பாக சேவை ஆற்றுங்க அமைச்சர் சக்கரபாணி அறிவுரை
ADDED : செப் 08, 2024 05:16 AM

ஒட்டன்சத்திரம்: ''இளைஞர்கள் அரசு பணியில் சேர்ந்து பொதுமக்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை ஆற்றிட வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் போட்டி தேர்வுக்குபயிற்சி பெற்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வினை எழுத உள்ளவர்களை வாழ்த்தி ஹால் டிக்கெட்டுகளைவழங்கிய அவர் பேசியதாவது:
இந்த தேர்வு மையத்தில் பயிற்சி பெற்ற 170 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு எழுத உள்ளனர்.இவர்கள் எண்ணங்கள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம். அதிக எண்ணிக்கையில் அரசு பணிகளுக்கு சென்று மக்கள் சேவைஆற்றிட வேண்டும் என்றார்.
நாமக்கல் துணை கலெக்டர் சிவக்குமார், தாசில்தார்கள் பழனிச்சாமி, சசி, பிரசன்னா, டி.எஸ்.பி., முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டனர்.