/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலைஞர் கனவு இல்லம் கட்ட 818 பயனாளிகளுக்கு ஆணை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
/
கலைஞர் கனவு இல்லம் கட்ட 818 பயனாளிகளுக்கு ஆணை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
கலைஞர் கனவு இல்லம் கட்ட 818 பயனாளிகளுக்கு ஆணை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
கலைஞர் கனவு இல்லம் கட்ட 818 பயனாளிகளுக்கு ஆணை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
ADDED : ஆக 11, 2024 06:15 AM

சாணார்பட்டி, கோபால்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கலைஞரின் கனவு இல்லம் கட்ட 818 பயனாளிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பணி ஆணைகளை வழங்கினார். ரூ.56 லட்சம் மதிப்பில் கொசவபட்டி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டஆய்வக கட்டடம், அஞ்சுகுழிபட்டியில் ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்தார்.
கோபால்பட்டி தனியார் மண்டபத்தில் நடந்த கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழாவிற்கு கலெக்டர் பூங்கொடி , மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் தலைமை வகித்தனர். அப்போது அவர் பேசியதாவது:
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் இந்தாண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியதில் சாணார்பட்டி ஒன்றியத்தில் மட்டும் 818 பேருக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே கட்டப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டு வீடு, காங்கிரீட் வீடு என எதுவாக இருந்தாலும் பழுதுபார்க்க நிதி வழங்கப்பட உள்ளது என்றார்.
நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணைத் தலைவர் ராமதாஸ், மாவட்ட கவுன்சிலர் லலிதா மோகன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ.,க்கள் இளையராஜா, சுமதி, ஊராட்சி தலைவர்கள் கவிதா தர்மராஜன், தேவி ராஜா சீனிவாசன், கந்தசாமி, கந்தவேல், சுரேஷ், விஜயா வீராச்சாமி, நிஷா, தமிழரசி கார்த்தியசாமி, முத்துலட்சுமி சத்யராஜ், ஜெர்மன் சாந்தி, தங்கவேல், நடராஜன், பராசக்தி முருகேசன், மணிமாறன், பஞ்சவர்ணம், வெங்கடேசன், சலேத் மேரி ஜான் பீட்டர், ஜான்சிராணி, பாலமுருகன், ஜெயலட்சுமி, சின்னையா கலந்து கொண்டனர்.