/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கி விட்டனர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
/
அ.தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கி விட்டனர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
அ.தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கி விட்டனர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
அ.தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கி விட்டனர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
ADDED : ஜூலை 14, 2024 06:56 AM

ரெட்டியார்சத்திரம் : ''தமிழகத்தில் அ.தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கி விட்டனர்'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
ரெட்டியார்சத்திரத்தில் அரசு கலை கல்லுாரி கட்டடபூமி பூஜையை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியின்போது மக்கள் நலனுக்கான எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் அக்கட்சியை மக்கள் ஒதுக்கி விட்டனர். தற்போது தமிழகத்தின் 12,500 ஊராட்சிகளில் குறை குறித்த புகார்களை நிவர்த்தி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இக்கல்லுாரி கட்டட பணிகள் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு முதல் செயல்பட துவங்கும் என்றார்.
கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி., ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சுந்தரி அன்பரசு வரவேற்றார்.பேரூராட்சித் தலைவர்கள் கன்னிவாடி தனலட்சுமி சண்முகம், ஸ்ரீ ராமாபுரம் சகீலா ராஜா ,ஊராட்சி தலைவர்கள் லட்சுமி, வெள்ளைத்தாய் பங்கேற்றனர்.