/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
-சாதனை படைக்கும் கிராம வீரர்கள் அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
/
-சாதனை படைக்கும் கிராம வீரர்கள் அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
-சாதனை படைக்கும் கிராம வீரர்கள் அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
-சாதனை படைக்கும் கிராம வீரர்கள் அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
ADDED : மே 20, 2025 01:19 AM
சின்னாளபட்டி: ''அரசு வழங்கும் 3 சதவீத ஒதுக்கீடு காரணமாக கிராம வீரர்களும் தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
என்.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில கால்பந்து போட்டி நடந்தது. திண்டுக்கல் டி.எஸ்.பி.கார்த்திக், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. வசந்தன், பாதிரியார் பெர்னாட்ஷா துவக்கி வைத்தனர். இரு நாட்களில் இரவு, பகலாக நடந்த போட்டிகளில் 27 அணிகள் பங்கேற்றன.
அமைச்சர் ஐ.பெரியசாமி இறுதி போட்டியை துவக்கி வைத்தார். இதில் மேட்டுப்பட்டி எஸ்.டி, எஸ்.ஏ அணி முதலிடம் , என்.பஞ்சம்பட்டி ஸ்கார்பியன்ஸ் புட்பால் கிளப் அணி 2ம் இடத்தை பெற்றன.
இதற்கான பரிசுகளை வழங்கிய அமைச்சர் பேசியதாவது விளையாட்டு துறை மேம்பட துணை முதல்வர் உதயநிதியின் நடவடிக்கைகளே காரணம். உலகளவில் தமிழகத்தை பேச வைத்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் கிராம விளையாட்டு வீரர்களும் தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.
இங்குள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானம் விரைவில் கேலரி வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீவல்சரகு ஊராட்சியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முருகேசன் கலந்து கொண்டனர்.