/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழகத்திற்கு நிதி வழங்காவிட்டால் இந்தியாவில் ஆட்சியை தொடர முடியாது சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி

ADDED : மார் 13, 2025 02:23 AM
திண்டுக்கல்:''தமிழகத்திற்கு நிதி வழங்காவிட்டால் மத்திய அரசு இந்தியாவில் ஆட்சியை தொடர முடியாது ''என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: எந்த போராட்டமாக இருந்தாலும் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள்தான் பங்கேற்பார்கள்.
தமிழக தமிழ் பள்ளி மாணவர்கள் ஹிந்தி என்றால் எங்கே இருக்கிறது என கேட்பார்கள். தமிழ் மொழி ஆட்சி மொழியாக வரவேண்டும் அது தான் எங்கள் கொள்கை. தமிழக முதல்வர் ஸ்டாலின் பல மாநிலங்களுக்காக போராடுகிறார்.
அவர் இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக இருக்கிறார். முஸ்லிம்கள், ஹிந்துக்கள் வாழும் இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க முடியாது. நம்முடைய உயிர் நாடியாக இரு மொழி கொள்கை இருக்கிறது.
நேரு மக்கள் ஹிந்தியை விரும்பும் வரை அதை திணிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்தார். உலகத்தின் தலைசிறந்த மொழி தமிழ் மொழியை காப்பதற்காக மக்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே வருவார்கள். மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி நிதியை நிறுத்திவிட்டது.
தமிழகத்திற்கு நிதி வழங்காவிட்டால் மத்திய அரசு இந்தியாவில் ஆட்சியை தொடர முடியாது. நவோதயா பள்ளியை தமிழகத்தில் எத்தனை கோடி கொடுத்தாலும் தொடங்க முடியாது என கருணாநிதி கூறினார்.
கருணாநிதியை விட ஒரு மடங்கு மேலே சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மும்மொழி கொள்கைக்கு எதிராக போராடி வருகிறார். அரசியல் வேறு ஆன்மிகம் வேறு. குடும்ப கட்டுப்பாடை முறையாக கடைபிடித்த மாநிலம் தமிழகம் என்றார்.