/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமலையான் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன உபகரணம்
/
வடமலையான் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன உபகரணம்
வடமலையான் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன உபகரணம்
வடமலையான் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன உபகரணம்
ADDED : மே 30, 2024 04:19 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள வடமலையான் மருத்துவமனையில் மருத்துவ சாதனையின் மேலும் ஒருமைல்கல்லாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மருத்துவ இயந்திரம்மாவட்டத்தின் முதன்முறையாக இறக்குமதி செய்துள்ளது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள வடமலையான் மருத்துவமனையில் இதுவரைபயன்பாட்டில் இருந்து வந்தஎண்டோஸ்கோப்பியால் இரைப்பை பகுதியின் திசுக்கள் சம்மந்தப்பட்ட நோய்களை மட்டுமே கண்டறிய முடிந்தது. தற்போதுஇறக்குமதி செய்யப்பட்டுள்ள அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மருத்துவ உபகரண வசதி மூலம் குடலின்
தோல் பகுதி, வெளிப்புற திசுக்கள் நிலையை எளிதில் துல்லியமாக கண்டறியலாம். இந்த உயர்ரக மருத்துவ உபகரணத்தில் எழும் உயர்அதிர்வெண் ஒலி அலைகள் மூலமாக உடலின் செரிமான பாதை, நுரையீரல், கணையம், பித்தப்பை, கல்லீரல், நிணநீர் கட்டிகள் அதை சுற்றியுள்ள திசுக்களின் நிலையை துல்லியமாககண்டறியும் வசதி ஏற்பட்டுள்ளது.கணையம், நுரையீரல்,, செரிமான புற்றுநோய்கள் மட்டுமின்றி,புற்றுநோய் கட்டியின் அளவு, பரவலை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்க எளிதாக உள்ளது.
ஆம்புலரி கார்சினோமா என்ற அரிய வகை புற்றுநோய் கட்டியை கண்டறியவும்,.
பித்தப்பை, பித்த நாளத்தில் ஏற்படும்கட்டிகளை கண்டறிந்து அதை துல்லியமாக வகைப்படுத்தி அதற்கான மருத்துவமுறை சிகிச்சைக்கு சிகிச்சை பெறுபவர்களை கொண்டு செல்லும் செயல்பாட்டில்
எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் தொழில்நுட்பம் ஈடுஇணையற்றதாகும். கணையத்தில் உள்ள திரவம் மற்றும் திசுக்களை சேகரிக்கவும் நீர்கட்டிகளிலிருந்து திரவங்களை அகற்றவும், பல்வேறு வீரியமிக்க கட்டிகளுக்கு சிகிச்சை வழங்கவும் இந்த உபகரணம் பெரிதும் பயன்படுகிறது. வாஸ்குலார் சிகிச்சைக்கும் பேருதவியாக எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பயன்படுகிறது.
உடலின் முக்கிய பகுதியான கணைய புற்றுநோய் வலிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்கும், நாள்பட்ட கணைய அழற்சியின் விளைவாக ஏற்படும் வலியை போக்குவதற்கும் இந்த மருத்துவ உபகரணம் பெரிதும் உதவுகிறது. எண்டோஸ்கோபி அல்ட்ரா சவுண்ட் மூலமாக செலியாக் பிளெக்ஸஸில் பீனால், எத்தனால் போன்ற ஆல்கஹால் சீகிச்சை அளிப்பதால்மூளை மற்றும் முதுகெலும்புக்கு வலிகளை கடத்தும் நரம்புகள் முற்றிலும் அழிக்க படுகின்றன.
இதனால் வலி நிவாரண சிகிச்சையில் மற்ற கருவிகளை விடவும் எண்டோஸ்கோபி அல்ட்ரா சவுண்ட் உபகரணத்தின் பங்கானது மிகவும் உயர்ந்துள்ளது. எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் செயல் முறையில் கதிர்வீச்சு அபாயம் இல்லை. வெளிநோயாளி பிரிவிலும் இந்த உபகரணம் மூலம் சிகிச்சை மேற்கொள்ளலாம்.இந்த நவீன சிகிச்சை முறைகள் யாவும் இ.யூ.எஸ். எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்டு உபகரணத்தின் பணியால் மட்டுமே சாத்தியமாவதாக மருத்துவர்கள் பெருமையுடன் கூறினர்.