sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தோல் மருத்துவத்தில் நவீன லேசர் சிகிச்சைகள்

/

தோல் மருத்துவத்தில் நவீன லேசர் சிகிச்சைகள்

தோல் மருத்துவத்தில் நவீன லேசர் சிகிச்சைகள்

தோல் மருத்துவத்தில் நவீன லேசர் சிகிச்சைகள்


ADDED : ஆக 04, 2024 06:24 AM

Google News

ADDED : ஆக 04, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தோல் மருத்துவம் என்றாலே மருந்து மாத்திரைகள் களிம்புகள் (Ointments) என்ற நிலை மாறி நவீன லேசர் சிகிச்சை முறைகள் முகத்தை பொலிவூட்ட வந்த வண்ணம் உள்ளன. முகப்பரு, கரும்புள்ளி (Laser Toning), முகப்பரு என்பது டீன்ஏஜ் எனப்படும் இளம் வயதினருக்கு வரக்கூடிய பிரச்னை. 13 வயது முதல் 35 வயது வரை சிலருக்கு அதற்குப் பின்னாலும் வரக்கூடிய முகப்பரு தானாகவே வந்து தானாகவே மறையும் என்றாலும் கரும்புள்ளி, பரு தழும்புகள் நிரந்தரமானவை. எனவே முறையான சிகிச்சை அவசியம். 3 முதல் 5 மாதங்கள் குறைந்தபட்சம் சிகிச்சை தேவைப்படும். திருமணம் வேலைவாய்ப்புக்காக சிகிச்சையை விரைவு படுத்த லேசர் டோனிங் சிகிச்சை (Qswitched Ndyag Laser Peel) சிறந்த பலனளிக்கும். 4 முதல் 6 முறை வரை லேசர் சிகிச்சை தேவைப்படும். பரு. கரும்புள்ளிகள் குறைவதோடு முகப்பொலிவையும் கூட்ட வல்லது.

பச்சை குத்திய எழுத்துக்களை நீக்கும் லேசர் சிகிச்சை (Laser Tattoo Removal) திருமணம்,ராணுவம், காவல்துறையில் வேலைவாய்ப்பு மற்றும் பிற காரணங்களுக்காக பச்சை குத்திய எழுத்துக்களை நீக்க பலரும் விரும்புகின்றனர். 2 முதல் 4 மாதங்களுக்கு முன்பே சிகிச்சையை ஆரம்பித்தால் தழும்பின்றி நல்ல முறையில் எழுத்துக்களை நீக்க முடியும். பலரும் சில நாட்களுக்குள் நீக்கிவிடலாம் என்ற கருத்தில் வருகின்றனர். இது தவறானது. முன்கூட்டியே திட்டமிட்டு சிகிச்சை எடுத்தால் நல்லது.

--- டாக்டர். காளீஸ்வரன் திண்டுக்கல்






      Dinamalar
      Follow us