/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து
/
வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து
ADDED : ஆக 08, 2024 11:01 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் இங்கு இரு இடங்களில், 'முஜிப் பிரியாணி' என்ற பெயரில் பிரியாணி கடை நடத்துகிறார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களுக்கு உதவ, திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதி ேஹாட்டலில் மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தொடங்கிய விருந்து இரவு 11:00 மணி வரை நடந்தது.
முதல் கட்டமாக 700 பேருக்கு பிரியாணி, இனிப்பு, சிக்கன் 65, முட்டை, தோசை, இட்லி என 10 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டன. 1,300 பேருக்கு மேல் விருந்தில் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்ற மக்கள், சாப்பிட்ட இலையின் கீழ், 500 - 2500 ரூபாய் வரை மொய் வைத்தனர்.
இந்த மொய் விருந்து மூலம் 2.16 லட்சம் ரூபாய்கிடைத்தது. இந்த பணத்தை விரைவில், கேரளா அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக, உரிமையாளர் முஜிபுர் ரகுமான் கூறினார்.