/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மொய்விருந்து தொகை- கேரள முதல்வரிடம் ஒப்படைப்பு
/
மொய்விருந்து தொகை- கேரள முதல்வரிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 15, 2024 05:03 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வயநாடு மக்களுக்கு உதவும் பொருட்டு நடந்த மொய்விருந்தில் கிடைத்த தொகையை கேரள முதல்வரிடம் வழங்கப்பட்டது.
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர். தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு முஜிப் பிரியாணி கடை சார்பில் மொய் விருந்து நடந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நுாற்றுக்கணக்கானோர் கலந்து கலந்து கொண்டு பங்களிப்பு செய்தனர்.
இந்த தொகையை கடையின் உரிமையாளர் முஜிபுர் ரகுமான் கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். முஜிப் பிரியாணி சார்பில் ரூ.3 லட்சம், பண்ணிடுவோம் யூடியூப் சேனல் சார்பில் ரூ.3 .80 லட்சம், சிறு குழந்தைகள் பங்களப்பான ரூ. 3900 என ரூ.6 .83 லட்சம் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்டகேரள முதல்வர் விஜயன் திண்டுக்கல் மக்களுக்கு நன்றி தெரிவித்ததாக முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.